business

img

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டையும் கைப்பற்றிய அதானி....

சென்னை:
அதானி குழுமத்துடன் இணைவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. 

உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும் வேகமாக வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேலும் மேம்படுத்தவும் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்நிறுவனத்துடன் பிளிப்கார்ட் இணைந்து செயல்படும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதிகொண்ட ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது டேட்டா சென்டரை சென்னையில் உள்ள அதானி கோனர்ஸ் நிறுவனத்தில் நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உதவும் நோக்கில் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் சுமார் 2,500 பேருக்குநேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

;